ராஜமௌலிக்கே நோ சொன்ன பிரபாஸ்…. அப்படி என்ன கேட்டார்?

செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (16:33 IST)
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ராதே ஷ்யாம் படத்தின் ரிலிஸ் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாக உள்ளது.

அடுத்த ஆண்டு கோடைக்கே வெளியாகும் என சொல்லப்பட்ட ஆர் ஆர் ஆர் படத்தின் ரிலீஸ், ஜனவரி 7 ஆம் தேதியே ரிலிஸாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் அதே தேதியில் ஏற்கனவே பிரபாஸின் ராதே ஷ்யாம் படமும் ரிலீஸாக உள்ளது. ஆனால் பட்ஜெட் அதிகம் என்பதால் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் படத்துக்காக ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸை தள்ளிவைத்துக் கொள்ள முடியுமா எனக் கேட்டுள்ளனர்.

ஆனால் நீண்டகாலமாக தயாரிப்பில் இருப்பதாகவும், ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டதாலும் முடியாது என அன்போடு மறுத்து விட்டார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்