கங்குவா படத்தில் வில்லன் பாபி தியோலுக்கு சண்டை மட்டும் இல்லை… சூப்பர் அப்டேட் கொடுத்த தனஞ்செயன்!

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2024 (07:59 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படம் இந்த ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி வியாழக் கிழமை  ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் கங்குவா திரைப்படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படமான தங்கலான் படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் படத்தில் உதிரன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் பாபி தியோலின் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக இருக்கும் தனஞ்செயன் படம்பற்றி சுவாரஸ்யமான அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் ”படத்தில் பாபி தியோல் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். அவருக்கு சூப்பர் மாஸ் பாடல் ஒன்றும் படத்தில் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்