தியேட்டருக்கு சென்று படம் பாருங்கள்.. ரசிகர்களுக்கு கங்கனா வேண்டுகோள்!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (13:46 IST)
பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதனால் பல முன்னணிக் கலைஞர்கள் இவரோடு இணைந்து பணியாற்ற விரும்புவதில்லை. முன்னணி ஒளிப்பதிவாளர் கங்கனாவின் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற மாட்டேன் என வெளிப்படையாகவே அறிவித்தார்.

சந்திரமுகி 2 படத்துக்குப் பிறகு கங்கனா கதாநாயகியாக நடிக்கும் தேஜஸ் திரைப்படம் ராணுவப் பின்னணியில் உருவாகி கடந்த 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் இப்போது இதுகுறித்து பேசியுள்ள கங்கனா “கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பே ரசிகர்கள் தியேட்டருக்கு வருவது குறைந்துவிட்டது. இப்போது இன்னும் மோசமாகி விட்டது. ரசிகர்கள் திரையரங்குக்கு சென்று படங்களைப் பாருங்கள். இல்லையென்றால் திரையரங்குகள் நடத்துகிறவர்கள் வாழ முடியாது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்