நேரடி இந்தி படத்தை இயக்கும் ஏ எல் விஜய்…!

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (07:52 IST)
பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதனால் பல முன்னணிக் கலைஞர்கள் இவரோடு இணைந்து பணியாற்ற விரும்புவதில்லை. ஆனால் ஆளும் பாஜக அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகின்றார் கங்கனா.

கங்கனா கதாநாயகியாக நடித்த தேஜஸ் திரைப்படம் ராணுவப் பின்னணியில் உருவாகி கடந்த 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முதல் 3 நாட்களில் 3.8 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த படம் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இப்போது கங்கனா நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தை தமிழ் சினிமா இயக்குனர் ஏ எல் விஜய் இயக்குகிறார். இந்த படத்தை தமிழ் சினிமா தயாரிப்பாளர் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார். நேரடியாக இந்தியில் உருவாகும் இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்