இந்தியன் 3க்காக மீண்டும் ஷூட்டிங் நடத்தவேண்டும்… படக்குழுவுக்கு கமல் அறிவுறுத்தல்!

vinoth
வெள்ளி, 19 ஜூலை 2024 (09:08 IST)
கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான இந்தியன் 2 திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதுவரை ஷங்கர் கேரியரில் இல்லாத அளவுக்கு மோசமான வசூலையும் பெற்று வருகிறது.

படத்தின் குறைகளில் மிக முக்கியமான ஒன்றாக சொல்லப்பட்டது படத்தின் நீளம்தான். இதனால் படத்தின் படத்தின் நீளத்தை 15 நிமிடங்கள் குறைத்து மீண்டும் சென்சாருக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்போது இதுபற்றி இந்தியன் 2 படக்குழு அப்டேட்டைக் கொடுத்துள்ளது. படத்தில் இருந்து 12 நிமிட நேரத்தைக் குறைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்போது நேரம் குறைக்கப்பட்ட வெர்ஷன் திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 குறித்த எதிர்மறை விமர்சனங்களால் கமல் மிகவும் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்தியன் 3 படத்தை மெருகேற்ற சில காட்சிகளை மீண்டும் ஷூட் செய்ய வேண்டும்  என கமல்ஹாசன் கண்டிப்புடன் படக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்