சின்ன இருமல் என்றால் கூட செய்திகள் வந்துவிடுகின்றன… DSP ஆடியோ விழாவில் கமல் பேச்சு!

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (08:51 IST)
நடிகர் கமல்ஹாசன் கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு லேசான சளி மற்றும் இருமல் இருந்ததால் அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

வீடு திரும்பிய அவர் விஜய் சேதுபதி நடித்துள்ள DSP படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது தன்னுடைய உடல்நிலை பற்றி பேசிய அவர் “நான் நன்றாக இருக்கிறேன். இப்போதெல்லாம் சின்ன இருமல் என்றால் கூட செய்திகள் வெளியிட்டு விடுகிறார்கள். இதற்கெல்லாம் ஊடகங்கள் பெருகியதும், என் மீது கூடியுள்ள அன்பும்தான் காரணம் என்று நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்