நாயகன் பட விவாதத்தின் உதவி இயக்குனரிடம் பல்ப் வாங்கிய கமல்! அப்படி என்ன நடந்தது தெரியுமா?

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (11:02 IST)
நாயகன் படத்தின் கதை விவாதத்தின் போது கமலுக்கும் அமரன் உள்ளிட்ட படங்களின் இயக்குனரான ராஜேஷ்வருக்கும் இடையே நடந்த மோதல் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தான் நடிக்கும் படங்களில் இயக்கம், பாடல் மற்றும் இசை உள்ளிட்ட விஷயங்களில் தலையிடுவார் என்று 30 ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது. படத்தின் கதாநயகன் கமல் என்பதால் அவர் சொல்வதை தட்ட முடியாமல் வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக வேண்டி இருக்கும். ஆனால் கமல் என்னதான் பெரிய ஆளாக இருந்தாலும் கமலையும் எதிர்த்து பேசுவது உண்டு. அந்த வகையில் நாயகன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் அமரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜேஷ்வருக்கும் கமலுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.

அது குறித்து மலர்வண்ணன் என்பவரின் முகநூல் பதிவு:-

நாயகன்' படத்தின் ஆரம்ப கட்ட discussion நடந்து கொண்டிருந்த சமயம்...
மணிரத்னம், வேலு நாயக்கனின் மகன் ரோலுக்கு நிழல்கள் ரவியை வைத்து பண்ணலாம் என முடிவு செய்ய, கமல் குறுக்கிட்டு அந்த மகன் கேரக்டரையும் தானே செய்ய விரும்புவதாக சொல்கிறார்.

நிழல்கள் ரவியை மனதில் ஃபிக்ஸ் செய்து விட்ட மணி கமலிடம் ஏற்கனவே படத்தில் உங்களுக்கு நாலு வித கெட்டப் இருக்கு, இதை நீங்கள் செய்ய வேண்டாம் என மறுக்கிறார்.

கமலோ விடாமல் அடம் பிடித்தபடி இருக்க, மணியின் அசோசியேட் ராஜேஷ்வர் கமலிடம் ரொம்ப சீரியஸாக, "சார் படத்துல வேலு நாயக்கருக்கு ஒரு மகள் கேரக்டர் கூட வருது, அதையும் நீங்களே பண்ணிடுங்க, பிரமாதமா இருக்கும்"ன்னு சொல்ல, மணி, முக்தா சீனிவாசன், ஜீவி அனைவரும் குபீரென சிரித்து விட கமலுக்கு சுர்ரென ஏறிடுச்சாம்.

அன்னைக்கு கோவிச்சிட்டு எழுந்து போன கமல், படம் எடுத்து முடியற வரைக்கும் எதுலயும் தலையிடலயாம். படத்தோட வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமா இருக்கலாம்னு இப்பவும் கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்க...
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்