10 விருதுகள் அள்ளிய தமிழ் திரையுலகம்: கமல்ஹாசன் வாழ்த்து

Webdunia
சனி, 23 ஜூலை 2022 (14:30 IST)
நேற்று 68வது தேசிய விருதுகள் அறிவிக்கப் பட்ட நிலையில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் 5 விருதுகளை பெற்றது என்பதும் ஒட்டுமொத்தமாக தமிழ் திரையுலகம் 10 விருதுகளை பெற்றது என்பதையும் பார்த்தோம் 
 
சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படத்திற்கு இரண்டு விருதுகளும் சிவரஞ்சினியும் சில பெண்களும் என்ற படத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்தது
 
 இந்திய திரையுலகில் தமிழ் திரைப்படத்திற்கு மட்டும் 10 தேசிய விருதுகள் கிடைத்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 
 
இந்த நிலையில் பத்ம விருதுகள் பெற்ற தமிழ் திரையுலகிற்கும் திரைஉலக கலைஞர்களுக்கும் உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்