ஸ்ரீப்ரியா படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை ரிலீஸ் செய்த கமல்!

Webdunia
வியாழன், 14 மே 2020 (16:47 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமான அரசியல் கருத்துக்களை பேசிக்கொண்டிருந்தாலும் ஒரு சில நேரங்களில் சினிமா குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்ரீப்ரியா உள்பட ஒருசில பிரபலங்கள் ஐபோனில் உருவாக்கிய ஒரு குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோவை வெளியிட்டுள்ளார் 
 
‘யசோதா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஸ்ரீபிரியா, நாசர் மற்றும் சிவகுமார் இணைந்து உருவாக்கியுள்ளனர். ரூபன் படத்தொகுப்பில் கிரிஷ் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் நிருத்யாபிள்ளை என்பவர் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்
 
இது ஒரு சிறப்பான முயற்சி என்றும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோவை ரிலீஸ் செய்வதில் தான் பெருமைப்படுவதாக விரைவில் இந்த படம் குறும்படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முழுக்க முழுக்க ஐபோனில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் விரைவில் யூடியூபில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்