கொரோனாவில் முதலிடத்தை நோக்கி தமிழகம் – கமல்ஹாசன் சாடல்!

வியாழன், 14 மே 2020 (09:28 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு அலட்சியமாக செயல்பட்டு வருவதாக கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் நாளுக்கு நாள் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக மகாராஷ்டிரம், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது.

கடந்த வாரத்தில் தமிழகத்தில் அதிகரித்த கொரோனா பாதிப்பினால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தேசிய அளவில் அதிகமான பாதிப்புகளை கண்டுள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் “முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது. கொரோனா பாதிப்பில் 8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது. காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு.” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்