நீங்க சிரிக்கிற மாதிரி மக்களும் சிரிக்கணும்! – எடப்பாடியாருக்கு கமல்ஹாசன் நூதன வாழ்த்து!

செவ்வாய், 12 மே 2020 (15:26 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளான இன்று நடிகர் கமல்ஹாசன் நூதனமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முதல்வரும், அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் இன்று வரது கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பாதிப்புகள் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கூடுவதை தவிர்க்க தொடர்ந்து அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளும் விமரிசையாக கொண்டாடப்படவில்லை. மாறாக அரசியல் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் “தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள். மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும்.” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்