கமல்ஹாசன் பிறந்தநாள்- புதிய போஸ்டர் வெளியிட்ட 'இந்தியன் -2 'படக்குழு

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (13:40 IST)
கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு இந்தியன் 2 படக்குழு  புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இந்திய சினிமாவின் பிரபல நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ பட ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்தியன் படம் 3 பாகங்களாக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் இதன் ஷூட்டிங் முடிந்த பின்னர், அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என தெரிகிறது.

அனிருத் இசையமைப்பில் உருவாகி படம் இப்படத்தின் இசை உரிமையை சோனி ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியது.

இந்த நிலையில்,  இந்தியன் 2 பட  இன்ட்ரோவை சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ரிலீஸ் செய்தார். அதேபோல் இந்தியன் பட இந்தி இன்ட்ரோவை சூப்பர் ஸ்டார் அமீர்கானும், மலையாளத்தில் சூப்பர்ஸ்டார் மோகன் லாலும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும், தெலுங்கில்  ஆர்.ஆர்.ஆர் பட இயக்குனர் ராஜமெளலி வெளியிட்டனர்.

இந்த வீடியோவை யூடியூப் பக்கத்தில் 1 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், மனோபாலா, உள்ளிட்டோ நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இன்று,  நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு 'இந்தியன் 2' படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம்  கமல்ஹாசனின் சேனாபதி கேரக்டரின்  புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளது. இந்தப் போஸ்டர் வைரலாகி வருகிறது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்