கவுண்டமணியின் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth

வெள்ளி, 31 ஜனவரி 2025 (15:14 IST)
கவுண்டமணி கடைசியாக நடித்த திரைப்படம் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை திரைப்படம். இந்நிலையில் இப்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணி ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை கவுண்டமணி காமெடிகளுக்கு ட்ராக் எழுதிய சாய் ராஜகோபால் இயக்குகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படம் சம்மந்தமான கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் இசை வெளியீடு வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி நடக்கவுள்ளது. அதனால் படம் பிப்ரவரி மாதத்திலேயே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nikil Murukan (@onlynikil)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்