தயாரிப்பாளர் தேடும் கமல்

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (18:10 IST)
தன்னுடைய அடுத்த படத்தைத் தயாரிக்க ஆள் தேடி வருகிறார் கமல் என்கிறார்கள்.



 
ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தைத் தொடர்ந்து கமலை இயக்கப் போகிறார் ஷங்கர் என்கிறார்கள். கமல் மற்றும் ஷங்கருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தால், இந்தத் தகவல் உண்மைதான் என்கிறார்கள். கமல் – ஷங்கர் கூட்டணியில் ஏற்கெனவே வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாக இருக்கிறது. கமலின் தற்போதைய அரசியல் கருத்துகளை மையமாகக் கொண்டு இந்தப் படத்தை எடுக்க உள்ளார் ஷங்கர். இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கான தயாரிப்பாளரைத் தேடி வருகிறார்கள் இருவரும்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்