புதிய படங்கள் வரிசையில் நாளை வெளியாகயுள்ள 11 திரைப்படங்கள்

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (17:44 IST)
தமிழ் சினிமாவில் வாரந்தோறும் புதிய படங்கள் வெளிவருவது வழக்கம். இந்நிலையில் சிறு பட்ஜெட் படங்கள் வெளியாவதிலும், அவற்றிற்கு தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல்கள் நிலவி வருகிறது. இந்த வாரம் 11 படங்கள் வெளியாகவிருக்கின்றன.

 
முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவரும் நாட்களில் சிறு பட்ஜெட் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் தயங்குவது  நியாம்தான். அந்த வகையில் ஆயுத பூஜையை ஒட்டி மகேஷ்பாபுவின் முதல் நேரடித் தமிழ்ப் படமான 'ஸ்பைடர்', விஜய்  சேதுபதியின் 'கருப்பன்', நயன்தாரா நடிக்கும் 'அறம்' ஆகிய படங்கள் அடுத்த வாரம் ரிலீஸாக இருக்கின்றன.
 
ரசிகர்கள் எதிர்பார்த்த 'மகளிர் மட்டும்', 'துப்பறிவாளன்' படங்கள் கடந்த வாரமே வெளியான நிலையில், ராணா நடிக்கும் 'நானே  ராஜு நானே மந்திரி' தெலுங்கு படத்தின் டப் ‘நான் ஆணையிட்டால்', நாசர், அனுஹாசன் நடித்துள்ள ‘வல்லதேசம்', சரண்  இயக்கத்தில் வினய் நடித்துள்ள ‘ஆயிரத்தில் இருவர்', இனிகோ பிரபாகர் நடித்திருக்கும் ‘பிச்சுவாகத்தி', ‘களவுத்  தொழிற்சாலை' , கோகுல் நடிக்கும் ‘கொஞ்சம் கொஞ்சம்', ‘பயமா இருக்கு', ‘நெறி', ‘காக்கா', ‘தெருநாய்கள்', ஓவியா  மலையாளத்தில் நடித்து தமிழில் டப் செய்யப்பட்டுள்ள ‘போலீஸ் ராஜ்ஜியம்' ஆகிய 11 படங்கள் வெளிவரவிருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்