சமீபகாலமாகவே தமிழக அரசு மற்றும் ஊழலுக்கு எதிராக கமல்ஹாசன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். எனவே, அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும், இளைஞர்களுக்கு மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருப்பதை சமூக வலைத்தளங்களில் காணமுடிகிறது.
இந்நிலையில், இதுபற்றி ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “இதுபற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?. கமல்ஹாசன் டிரம்ப்பை கூட சந்தித்து பேசட்டும். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை” எனக் கூறினார்.
சமீப காலமாக, ஜெயக்குமார் யாரை கிண்டல் செய்வதென்றாலும் டிரம்பின் பெயரைத்தான் பயன்படுத்துகின்றனர். தினகரன் டிரம்பை கூட பதவியிலிருந்து நீக்குவார் எனக் கூறினார். அதேபோல், டிரம்ப் வெற்றி பெற்றதற்கு கூட ஓ.பி.எஸ் நானே காரணம் எனக் கூறுவார் என கிண்டலடித்திருந்தார்.