கமல் படம் கன்ஃபார்ம்

Webdunia
புதன், 7 டிசம்பர் 2016 (17:35 IST)
சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பை இந்த மாத மத்தியில் கமல் தொடங்குகிறார். இந்த நேரத்தில், அவர் மௌலி இயக்கத்தில் ஏவிஎம் தயாரிக்கும் மெய்யப்பன் என்ற படத்தில் நடிப்பதாக செய்தி வெளியானது. அதனை உடனே மௌலி மறுத்தார்.


 
 
ஆனால் உண்மை நிலவரம் என்ன?
 
கமலுக்கா மௌலி ஒரு கதை ஏற்கனவே எழுதி வைத்துள்ளார். நகைச்சுவை கதையான இதில் கமல் நடிக்க உள்ளார். ஆனால், படத்தை ஏவிஎம் தயாரிப்பதாகவும், மெய்யப்பன் என பெயர் வைத்திருப்பதாகவும் வந்த செய்திதான் தவறு, ஆனால், மௌலி கமலை இயக்குவது உறுதி என்று விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
 
சபாஷ் நாயுடு படம் தொடங்கிய பிறகு இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கமலிடம் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்