பாலியல் தொல்லைகளால்தான் சினிமா & சீரியலை விட்டு விலகினேன் – பிரபல குழந்தை நட்சத்திரம் ஆதங்கம்!

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (08:00 IST)
தமிழ் சினிமாவில் பிரபல குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்தவர் கல்யாணி. அவர் தான் ஏன் சினிமா மற்றும் சீரியலில் பெரிய அளவுக்கு வளர முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

அள்ளித்தந்த வானம், ரமணா உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் கல்யாணி. பின்னர் அவர், இன்பா, கத்திக்கப்பல், இளம்புயல் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாகவும் நடித்தார். ஆனால் அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகி, சீரியலில் நடிக்கவும், சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கவும் செய்தார். ஆனால் அங்கிருந்தும் திடீரென விலகினார்.

இந்நிலையில் சினிமா மற்றும் சீரியலில் இருந்து ஏன் விலகினேன் என இப்பொது பதிலளித்துள்ளார். அதில். ‘சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்த போது, என் அம்மாவுக்கு போன் செய்து பெரிய படத்தில் உங்கள் மகள்தான் கதாநாயகியாக நடிக்க போகிறார்’ என்று கூறுவார்கள். அதைக் கேட்டு சந்தோஷப்பட்டால் ‘ஒரு சின்ன அட்ஜெஸ்ட்மெண்ட்’ என்று பச்சையாக கேட்பார்கள். அதனால் சினிமாவே வேண்டாம் என முடிவு செய்தோம்’ எனக் கூறியுள்ளார்.

அதெ போல் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியபோது உயர் பதவியில் இருந்தவர் இரவில் பப்புக்கு செல்லலாமா என்று கேட்டார். மாலையில் 'காப்பி ஷாப்'பில் சந்திக்கலாம் என்றேன். அதனால் அவர் என்னை அந்த நிகழ்ச்சியில் இருந்து தூக்கிவிட்டார்’ எனறு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்