மாரி 2 படத்தின் தெறி மாஸ் வசனத்திற்கு காப்புரிமை கேட்ட காஜல் !

Webdunia
புதன், 26 டிசம்பர் 2018 (15:31 IST)
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியாகியுள்ள மாரி 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. 

 


இந்நிலையில் இந்த படத்தில் தனுஷ் பேசும் மாஸ் வசனத்திற்கு நடிகை காஜல் பசுபதி காப்புரிமை கோரியுள்ளார். 
 
தைரியமான பெண்ணாக ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் வலம்வந்தவர் காஜல். அவரின் கம்பீரமான குரலும், நேர்த்தியான நடையும், துடிப்பான பேச்சுமே அனைவருக்கும் தெரிந்தது. சம்பீத்தில் தனது ட்விட்டர் அனைவருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். 
 
அதில் அவர் கூறியிருப்பதாவது,  நடிகர் தனுஷ் மாரி 2 படத்தில் பேசும் ‘இப் யூ ஆர் பேட். ஐ அம் யுவர் டேட் என்ற வசனம் தன்னுடையது என்றும். இதனால் தான் காப்புரிமை கோர இருப்பதாகவும் கிண்டலாக பதிவிட்டுள்ளார் நடிகை காஜல்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்