சீதக்காதி, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், கனா, அடங்கமறு, மாரி 2, கே.ஜி.எஃப் ஆகிய படங்கள் திரையரங்கங்களைப் பகிர்ந்து கொண்டன. இதில் அறிவிக்கப்படாத ரிலிஸாக வந்த மாரி 2 அதிகளவில் தியேட்டர்களையும் கைப்பற்றிக்கொண்டது. இதனால் மற்ற படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காத சூழ்நிலை உருவானது. இந்த சூழ்நிலையை ஒவ்வொருப் படமும் ஒவ்வொரு விதமாக எதிர்கொண்டன.
சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் ரெட் ஜெய்ண்ட் மூவிஸின் உதவியை நாடி தியேட்டர்களைப் பிடித்தது. கனா சிவகார்த்திக்கேயனின் தயாரிப்பு என்ற விளம்பரத்தால் தியேட்டர்களைக் கவர்ந்தது. சீதக்காதி விஜய் சேதுபதியின் கடந்த கால வெற்றிகளால் போதுமான தியேட்டர்களைகளை பெற்றது, கன்னட மொழிமாற்றுப் படமான கே.ஜி. எஃப் நடிகர் சங்கத் தலைவர் விஷாலின் விநியோகத்தால் வெளியானதால் ஓரளவுக்கு தியேட்டர்களைப் பெற்றது. ஆனால் ஜெயம் ரவி நடித்த அடங்கமறு எந்த உதவியும் இல்லாமல் கிடைத்தக் குறைவான தியேட்டர்களில் ரிலிஸானது.
இப்போது படங்கள் எல்லாம் ரிலிஸாகி 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள படமாக அடங்கமறு இருக்கிறது. சுவாரசியமானத் திரைக்கதையாலும் ஜெயம் ரவியின் சிறப்பான நடிப்பாலும் படம் மக்களைக் கட்டிப்போட்டுள்ளது. சீதக்காதி ஆமைவேகத் திரைக்கதையாலும், முதல் 40 நிமிடங்களே விஜய் சேதுபதி வருவதாலும் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மாரி 2 வின் மோசமான திரைக்கதையாலும் கிளிஷேவானக் கதையாலும் ரசிகர்களைக் கவர தவறியுள்ளது. கனாப் படம் கிரிக்கெட் மற்றும் விவசாயம் போன்ற வெகுஜன ரசனைக்கு உட்படுத்த விஷயங்களைப் பற்றி பேசியுள்ளதால் மக்களுக்கு திருப்தியடைந்துள்ளது. சிலுக்குவார்ப்பட்டு சிங்கமோ காமெடிப் படமாக இருந்தாலும் ரசிகர்களுக்கு பெரிய அளவில் திருப்தியளிக்கவில்லை. அதனால் ரசிகர்கள் மத்தியில் அடங்கமறு படத்திற்கு வரவேற்பு அதிகமாகி உள்ளது.