ரூ.83 ஆயிரம் உதவி கேட்ட மாணவிக்கு ரூ.1 லட்சம் அனுப்பிய தமிழ் நடிகை!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (07:46 IST)
டுவிட்டரின் மூலம் 83 ஆயிரம் உதவி கேட்ட மாணவி ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய் அனுப்பிய தமிழ் நடிகை குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
 
ஐதராபாத்தை சேர்ந்த சுமா என்ற மாணவி கல்லூரி கட்டணம் கட்டுவதற்கு பணம் இல்லை என்றும் அதனால் 83 ஆயிரம் ரூபாய் உதவி வேண்டும் என்றும் நடிகை காஜல் அகர்வாலின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் 
 
இந்த டுவிட்டர் பதிவை பார்த்த காஜல் அகர்வால் உடனே அந்த மாணவியை தொடர்பு கொண்டு அவருடைய வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று ஒரு லட்ச ரூபாய் அனுப்பி உள்ளார் மாணவி கேட்டதோ வெறும் 83 ஆயிரம் தான் ஆனால் காஜல் அகர்வால் ஒரு லட்ச ரூபாய் அனுப்பியதை அடுத்து டிவிட்டர் பயனாளிகள் மற்றும் நெட்டிசன்கள் காஜலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் பண உதவி பெற்ற மாணவியும் காஜல் அகர்வாலுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். காஜல் அகர்வாலின் இந்த உதவி தற்போது வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்