ஜேஈஈ நுழைவுத்தேர்வில் 300க்கு 300 மதிப்பெண் எடுத்த முதல் மாணவி

வியாழன், 25 மார்ச் 2021 (08:05 IST)
ஜேஈஈ நுழைவுத்தேர்வில் 300க்கு 300 மதிப்பெண் எடுத்த முதல் மாணவி
ஜேஈஈ தேர்வில் 300க்கு 300 மதிப்பெண் எடுத்து மாணவி ஒருவர் சாதனை புரிந்துள்ளார். இதுவரை ஜேஈஈ தேர்வில் 100 சதவீத மதிப்பெண்கள் யாருமே எடுத்ததில்லை என்ற நிலையில் டெல்லியை சேர்ந்த மாணவி ஒருவர் இந்த சாதனையை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சமீபத்தில் ஜேஈஈ நுழைவுதேர்வு நடந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் நேற்று மாலை வெளியானது. இந்த தேர்வை எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்வு முடிவை ஆவலுடன் பார்த்தனர்.
 
இந்த நிலையில் ஜேஈஈ மெயின் தேர்வில் முன்னோருக்கு 300க்கு 300 மதிப்பெண் பெற்று டெல்லியை சேர்ந்த காவியா சோப்ரா என்ற மாணவி சாதனை புரிந்துள்ளார். இந்த தேர்வில் 100 சதவீத மதிப்பெண்கள் எடுத்த முதல் மாணவி இவர்தான் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே காவியா சோப்ரா கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஜேஈஈ தேர்வில் 99.9 சதவீத மதிப்பெண் பெற்றதாகவும் இருப்பினும் 100% மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக மீண்டும் இந்த தேர்வை எழுதி இந்த சாதனையை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
ஜேஈஈ மெயின் நுழைவுத்தேர்வில் 300-க்கும் 300 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்த காவியா சோப்ராவுக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்