மெர்சலுக்கு தமிழிசை, சர்காருக்கு கடம்பூர் ராஜூ...! கலாய்த்த புகழேந்தி

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (19:12 IST)
மெர்சல் படத்தின் விவகாரத்தில் தலையிட்டு படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தவர் தமிழிசை.

தற்போது அதே பாணியில் சர்கார் படத்திற்கும் எதிர்மறையான கருத்துக்களை சில அரசியல் வாதிகள் கூறிவருகின்றனர்.
 
அந்த வரிசையில் எச். ராஜா, அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ போன்றவர்கள் தற்போது  வெளிவந்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு இலவசமாக விளம்பரம் தேடித்தருகிறார் என கர்நாடக மாநில அமமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 
 
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளரும், கர்நாடக மாநில அமமுக செயலாளருமான புகழேந்தி கூறியதாவது,
 
பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை, விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு விமர்சனம் செய்தை போலவே, அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ தற்போது வெளிவந்துள்ள சர்கார் திரைப்படத்திற்கும்  இலவசமாக விளம்பரம் தேடித்தருகிறார் என்று நக்கலடித்துள்ளார்.
 
மேலும் பேசிய அவர்,  20 தொகுதி மட்டுமல்ல, 234 தொகுதிக்கும் தமிழகத்தில் தேர்தல் நடந்தால் அதிமுக 8 தொகுதி அல்ல ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது” என்றும் புகழேந்தி கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்