விஜய் ஆண்டனியின் காளி டிரெய்லர்

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (19:06 IST)
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் காளி படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

 
விஜய் ஆண்டனி தனக்கான கதையை மிக கவனத்துடன் தேர்வு செய்து வருகிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அண்ணாதுரை படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி காளி படத்தில் நடித்துள்ளார்.
 
இதை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். வணக்கம் சென்னை படத்திற்கு பிறகு இவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் சுனைனா, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்