விஜய் ஆண்டனியின் அடுத்த படம் ‘திமிரு பிடிச்சவன்’

வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (16:03 IST)
விஜய் ஆண்டனி அடுத்து நடிக்கும் படத்திற்கு ‘திமிரு பிடிச்சவன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காளி’. அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி இந்தப் படத்தைத் தயாரிக்க, விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படத்தின் ஷூட்டிங், சில நாட்களுக்கு முன்புதான் முடிந்தது. இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி. ‘நம்பியார்’ படத்தை இயக்கிய கணேசா இயக்கும் இந்தப் படத்துக்கு ‘திமிரு பிடிச்சவன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
 
வழக்கம்போல விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி படத்தைத் தயாரிக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். இந்த மாதம் 7ஆம் தேதி ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்