முதல்முறையாக போலீசாக நடிக்கும் ஜோதிகா

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (15:13 IST)
கதாநாயகி முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் ஜோதிகா முதல் முறையாக பாலா படத்தில் நடிக்க உள்ளார். 


 

 
பாலா படங்கள் எல்லாமே வித்தியாசமான கதை களம் கொண்டது. இவரது படத்தில் நடிக்க அனைத்து நடிகர்களும் ஆவலுடன் இருப்பது உண்டு. இவரது படத்தில் நடித்த பிந்தான் சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்கள் புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது மகளிர் மட்டும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜோதிகா அடுத்து பாலா இயத்தில் முதல்முறையாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவர் பெண் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இதுவே ஜோதிகா தமிழ் சினிமாவில் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். 
 
இப்படத்தை பாலா முழுக்க முழுக்க சென்னையிலேயே படமாக்க இருக்கிறாராம். பாலாவின் B Studio நிறுவனமும், சூர்யாவின் 2டி நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்க இருக்கின்றனர்.
அடுத்த கட்டுரையில்