பாலிவுட் ரி எண்ட்ரியில் கலக்கும் ஜோதிகா… ஷைத்தான் படத்தின் மைல்கல் வசூல்!

vinoth
புதன், 3 ஏப்ரல் 2024 (07:18 IST)
தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.

இதையடுத்து பாலிவுட்டில் ஷைத்தான் என்ற படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் ஆகியோரோடு இணைந்து நடித்தார். இந்த படத்தை சூப்பர் 30 படத்தை இயக்கிய விகாஸ் பால் இயக்கினார். ஹாரர் த்ரில்லர் படமான ஷைத்தான் குஜராத்தி மொழியில் வெளியான ‘வாஷ்’ என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த படம் மார்ச 8 ஆம் தேதி ரிலீஸ் ஆன நிலையில் நல்ல விமர்சனங்களைப் பெற்று முதல் நாளில் மட்டும் 15 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்பட்டது. தொடர்ந்து நல்ல வசூலை செய்து வந்த இந்த திரைப்படம் இப்போது உலகம் முழுவதும் 201 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்