500 கோடி ரூபாய் வசூலைக் கடந்த தேவரா… மாஸ் காட்டினாரா ஜூனியர் என் டி ஆர்?

vinoth
திங்கள், 14 அக்டோபர் 2024 (10:14 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில்  ஜூனியர் என்டிஆரின்  30 ஆவது படமான ‘தேவரா’கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.  இந்த படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது.

இரண்டு பாகங்களாக உருவாகும் படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் முதல் காட்சியிலேயே நெகட்டிவ் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன. பல காட்சிகள் இணையத்தில் ட்ரோல் ஆகின. ஆனாலும் படம் வசூலில் பட்டையக் கிளப்பியுள்ளது. முதல் நாளில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 172 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அதன் பிறகு படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களால் வசூல் வீழ்ச்சியடையத் தொடங்கியது. இதனால் படம் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது 16 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 509 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் திரையரங்குகள் மூலமாக 600 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதைவிட குறைவாகவே வசூலித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்