படங்களைத் திருட்டுத்தனமாக பதிவு செய்தது எப்படி?... தமிழ் ராக்கர்ஸ் குழு அளித்த வாக்குமூலம்!

vinoth

திங்கள், 14 அக்டோபர் 2024 (10:08 IST)
புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ஒரு சில மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருவது திரை உலகினர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் குறித்த விவரங்களை பெரும் முயற்சி செய்தும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் கடந்த ஜூலை மாதம் கேரளா போலீசார் அதிரடியாக மதுரையில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் முக்கிய நிர்வாகியை கைது செய்துள்ளனர்.

அவரிடம் விசாரணை செய்ததில் குருவாய் 5000 பணத்திற்காக கடந்த சில ஆண்டுகளாக தியேட்டரில் சிறிய கேமரா மூலம் படமாக்கிய புதிய திரைப்படங்களின் வீடியோக்களை பதிவு செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து விசாரணையில் மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதில் “எந்த திரைப்படம் வெளியானாலும் அதற்கு முதல் நாளே தமிழ்நாடு, கேரளா அல்லது கர்நாடகாவில் உள்ள திரையரங்கில் டிக்கெட் முன்பதிவு செய்து, வரிசையாக ஐந்து டிக்கெட்களை எடுத்து உள்ளே சென்று நடுவில் உள்ளவர் போர்வையால் தன்னை மூடிக்கொண்டு, அதற்குள் கேமராவைப் பொருத்தி படத்தைப் பதிவு செய்வோம்” என வாக்குமூலம் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்