இந்தியாவில் பிரபலமான இருந்து வரும் ஓடிடி தளங்களில் ஹாட்ஸ்டாரும் ஒன்று. இதுநாள் வரை ஐபிஎல் கிரிக்கெட்டை ஆன்லைனில் ஒளிபரப்பும் உரிமை ஹாட்ஸ்டாரிடம் இருந்த நிலையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ஜியோ சினிமா ஓடிடி பெற்றது. ஐபிஎல்லை ஜியோ சினிமா இலவசமாக ஒளிபரப்பி வரும் நிலையில் கோடிக் கணக்கானோர் ஜியோ சினிமா செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து ஹெச்பிஓ தொடர்களை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை பெற ஜியோ சினிமா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக பிரபலம் வாய்ந்த கேம் ஆப் த்ரோன்ஸ், லாஸ்ட் ஆப் அஸ், வெஸ்ட் வோர்ல்ட் ஆகிய பல தொடர்கள் ஹெச்பிஓ வசம் உள்ளதால் ஐபிஎல்லிற்கு பிறகும் ஜியோ சினிமாவின் வாடிக்கையாளர்களை அதிகரிக்க இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.