பயனர்களிடன் சந்தா வசூலிக்க திட்டம்.. ஜியோ சினிமா முடிவால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (11:23 IST)
ஜியோ சினிமா தற்போது ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்பு வருகிறது என்பதும் இதனால் கோடிக்கணக்கான மக்கள் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை கண்டு களித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஐபிஎல் சீசன் முடிந்தவுடன் பயனர்களிடமிருந்து சந்தா கட்டண வசூலிக்க ஜியோ சினிமா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இலவசமாக தற்போது ஐபிஎல் போட்டிகள் உட்பட பல நிகழ்ச்சிகளை ஜியோ சினிமா தந்து கொண்டிருந்தாலும் விரைவில் சந்தா வசூலிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
அடுத்து மாறும் சந்தா கொடுத்து விபரம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஜியோ சினிமா சந்தா வசூலித்தாலும் அது மிகவும் குறைவான கட்டணமாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது
 
இருப்பினும் ஐபிஎல் போட்டி முடியும் வரை பயனர்கள் ஜியோ சினிமா தளத்தில் போட்டிகளை இலவசமாக பார்க்க முடியும் என்பதை ஜியோ சினிமா நிர்வாகிகள் உறுதி செய்துள்ளனர்
 
ஐபிஎல் போட்டியை இலவசமாக ஒளிபரப்பியதில் இருந்து ஜியோ சினிமா நாடு முழுவதும் பிரபலம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்