சிஎஸ்கே உள்ள வந்தாலே சாதனைதானே! மற்ற எந்த அணியும் செய்யாத புது ரெக்கார்ட்!

செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (09:55 IST)
நடப்பு ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சிஎஸ்கே அணி பல சாதனைகளை படைத்து வருகிறது.

2023ம் ஆண்டிற்கான ஐபிஎல் 16வது சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் மோதிக் கொண்ட நிலையில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்து 226 ரன்களை குவித்த சென்னை அணி ஆர்சிபியை 218 ரன்களுக்குள் சுருட்டி வெற்றி பெற்றது.

இந்த சீசனில் அதிகபட்ச ரன் இலக்காக இது உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச் என்றாலே பெரும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். மற்ற மேட்ச்சை விட சிஎஸ்கே மேட்ச்சை அதிகமான ரசிகர்கள் பார்க்கின்றனர். தற்போது ஆன்லைன் ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள ஜியோ சினிமா ஐபிஎல்லை இலவசமாக ஒளிபரப்பி வருகிறது.

கடந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே நடந்த போட்டியை ஜியோ சினிமா மூலமாக 2.2 கோடி பேர் லைவில் பார்த்தனர். இந்த ஐபிஎல் சீசனில் அதிகம் லைவ் பார்த்த சாதனையாக அது இருந்தது. தற்போது தனது சாதனையை தானே முறியடித்துள்ளது சிஎஸ்கே.

நேற்று நடந்த சிஎஸ்கே – ஆர்சிபி போட்டியை ஒரே சமயத்தில் 2.4 கோடி பேர் லைவாக பார்த்துள்ளனர். இதன்மூலம் ஜியோ சினிமாவில் அதிக பேரால் பார்க்கப்பட்ட ஐபிஎல் போட்டி என்ற சாதனையை இந்த போட்டி படைத்துள்ளது.

Edited by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்