மாயாஜால நாயகன் மீண்டும் வறார்! – வெப் சிரிஸாக “ஹாரி பாட்டர்”

வியாழன், 13 ஏப்ரல் 2023 (16:51 IST)
உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற மந்திரவாதிகள் கதையான ஹாரி பாட்டர் மீண்டும் வெப் சிரிஸாக தயாராகிறது.

பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜே.கே.ரோவ்லிங் எழுதி உலகம் முழுவதும் விற்பனையில் பெரும் சாதனை படைத்த மந்திரவாதிகள் கதை “ஹாரி பாட்டர்”. டேனியல் ராட்க்ளிப் ஹாரி பாட்டராக நடித்து வெளியான ஹாரி பாட்டர் பட வரிசைகள் உலகம் முழுவதும் பெரும் பிரபலமானது. 7 புத்தகங்களாக எழுதப்பட்ட இந்த நாவல் 8 திரைப்படங்களாக உருவாக்கப்பட்டது.

இன்றும் மீண்டும் நிகழ முடியாத அற்புதமாக அந்த படம் ஹாலிவுட் உலகில் கருதப்படுகிறது, இந்நிலையில் ஹாரி பாட்டர் கதையை மீண்டும் இணைய தொடராக எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வெப் சிரிஸின் இணை தயாரிப்பாளராக ஜே.கே.ரோவ்லிங் இணைகிறார்.

ஹாரி பாட்டரின் மந்திர, மாயாஜால உலகிற்குள்ளும், ஹாக்வார்ட்ஸ் மாயாஜால பள்ளிக்குள்ளும் மீண்டும் ஒருமுறை பயணிக்க ஹாரி பாட்டர் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் டிஸ்கவரி நிறுவனம் வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனத்தின் உரிமையை ஏற்ற நிலையில் HBO Max செயலியை விரிவுப்படுத்தும் விதமாக பல புதிய தொடர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஹாரி பாட்டர் வெப் சிரிஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தில் இல்லாத கூடுதலான பல கதைகள், கதாப்பாத்திரங்கள் இதில் அறிமுகமாக உள்ளன.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்