ஜிகர்தண்டா -2 பட முக்கிய அப்டேட்!

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (15:17 IST)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்தின் 2 வது பாகம் பற்றிய தகவல்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இந்த படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்நிலையில் இப்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இதுகுறித்து இயக்குனர் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி, ஜிகர்தண்டா -2 ஆம் பாகம் சிறப்பாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்