உதவி இயக்குனர்களுக்காக வொர்க் ஷாப் நடத்தும் லோகேஷ்… எங்கே? எப்போது?... முழு விவரம்!

திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (14:46 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். விக்ரம் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு அவர் மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது தமிழ்  ஸ்டுடியோ என்ற சினிமா சார்ந்த அமைப்பு நடத்தும் வொர்க் ஷாப் ஒன்றில் கலந்துகொள்ள உள்ளார். இந்த பயிற்சிப் பட்டறை ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடக்க உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்