அடுத்து ராகவா லாரன்ஸுக்கு வில்லனாகும் எஸ் ஜே சூர்யா… ஜிகர்தண்டா 2 அப்டேட்!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (09:40 IST)
ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனம் ஆகியோர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இந்த படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இதையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. ஆனால் முந்தைய படத்துக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது தானே இந்த படத்தை தயாரிக்கும் கார்த்திக் சுப்பராஜ், லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோரை முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்