எனது அப்பா அம்மாவுக்கு அந்த விஷயம் கவலையாக இருக்கும்… ஜெயம் ரவி வருத்தம்!

vinoth
சனி, 12 அக்டோபர் 2024 (09:43 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவிக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இப்போது விவாகரத்துக்கு ரவி விண்ணப்பித்துள்ளார். ஆனால் ஆர்த்தி தரப்பில், தன்னிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக ரவி இந்த முடிவை எடுத்துள்ளார் என சொல்லப்பட்டது.

இதையடுத்து ஜெயம் ரவி தரப்பில் இருந்து ஆர்த்தி மற்றும் அவரது அம்மா சுஜாதா ஆகியோர் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ஜெயம் ரவிக்கு என்று தனி வங்கிக் கணக்குக்குக் கூட இல்லையாம். ஆர்த்தியோடு சேர்ந்து ஜாய்ண்ட் அக்கவுண்ட் இருந்துள்ளது. அதனால் ஜெயம் ரவி தன்னுடைய கிரெடிட் கார்ட் போன்றவற்றைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கினால் உடனே ஆர்த்திக்கு மெஸேஜ் சென்றுவிடுவாம். அவர் உடனே போன் செய்து எங்கே இருக்கிறீர்கள்? என்ன ஷாப்பிங் செய்தீர்கள் எனக் கேட்பாராம். இதனால் அவருடைய தனிப்பட்ட சுதந்திரம் பறிபோய்விட்டதாகவும் என அவர் சொன்னதாக எல்லாம் சொல்லப்பட்டது.

இப்போது பிரதர் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் ஜெயம் ரவி தன்னுடைய பர்சனல் விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். அதில் “என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மற்றவர்கள் பேசுவதை நான் கண்டுகொள்ள மாட்டேன். ஆனால் அது எனது அப்பா அம்மாவுக்குக் கவலையாக இருக்கும். எனது நடிப்பைப் பற்றி யாராவது விமர்சித்தால் நான் ஏற்றுக்கொள்வேன். அடுத்த படத்தில் அதை சரிசெய்து கொள்ள முயல்வேன். ஆனால் என் தனிப்பட்ட விஷயம் என்பது என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்