சமந்தா விவாகரத்து குறித்த சர்ச்சை கருத்து: அமைச்சர் சுரேகா அதிரடி..!

Siva

வியாழன், 3 அக்டோபர் 2024 (11:31 IST)
நடிகை சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பெண் அமைச்சர் சுரேகா, தனது கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநில அமைச்சர் சுரேகா, நேற்று செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும் போது, சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவ் அவர்கள் சமந்தாவை விரும்பியதாகவும், அவருக்கு ஒத்துழைத்த நாகார்ஜுனா குடும்பத்தினர் சமந்தாவை வலியுறுத்தியதாகவும் கூறியிருந்தார்.

இந்த பேட்டிக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், நாகார்ஜுனா, சமந்தா, நாக சைதன்யா உள்ளிட்டவர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தனது கருத்தை திரும்பப் பெற்றுள்ளதாக சுரேகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், "என்னுடைய அரசியல் பயணங்களில், அரசியல் ஆதாயத்திற்காக யாருடைய குடும்ப பிரச்சனையையும் பேசியது இல்லை.

சமந்தா மற்றும் அவரது குடும்பத்தை இழிவுபடுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. நான் எப்போதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதில்லை. எனது பேச்சு கருத்து அவர்களை புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்.
 
பெண்களை இழிவுபடுத்தும் அரசியல் தலைவர்களை நோக்கி தான் நான் கேள்வி எழுப்பியிருந்தேன். சமந்தாவின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. அவர் தன்னம்பிக்கையுடன் வளர்ந்தவர் என்பது எனக்கு தெரியும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்