இறுதி கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி திரைப்படம்!

vinoth
செவ்வாய், 19 மார்ச் 2024 (15:04 IST)
ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 32 வது திரைப்படமாக ஜீனி என்ற திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 25 ஆவது படமான இந்த படத்தை அர்ஜுனன் என்பவர் இயக்கி வருகிறார்.

ஏஆர் ரஹ்மான் இசையில் மகேஷ் முத்துச்செல்வன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது. பேன் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஒரு பேண்டஸி திரைப்படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படத்தின் பெரும்பாலான காட்சிகளை செட் அமைத்து படமாக்கி முடித்துள்ள இயக்குனர் அர்ஜுனன் தற்போது மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள ரயில் செட்டில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த செட்டின் மதிப்பு 2 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்