அதிக வெப்பம்: பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்!- பிரேசில் அரசு

Sinoj

செவ்வாய், 19 மார்ச் 2024 (14:33 IST)
பிரேசில் நாட்டில் வெல்ல அலை அதிகமாக இருப்பதால்  பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
பிரேசில் நாட்டில் கடும் வெப்பம் நிலவுகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
 
தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று அதிகபட்சமாக 62.3 டிகிரி  செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
 
இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகளவு வெப்பம் ஆகும்.  வரும் தினங்களிலும் இதேபோல் வெப்ப நிலை நிலவும்  என்பதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 
இதனால் வெப்பத்தை தணிக்க வேண்டி, ஐபனிமா மற்றும் கோபகபனா கடற்கரைகளில் மக்கள் குவிந்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்