பிறந்த நாளில் விவாகரத்து மனு தாக்கல் செய்த ஜெயம் ரவி.. ரசிகர்கள் சோகம்..!

Siva
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (16:58 IST)
நடிகர் ஜெயம் ரவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இதே நாளில் அவர் மனைவியை பிரிய விவாகரத்து மனுவை சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கையில் இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதனை அடுத்து இன்று ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் 2009 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு அக்டோபர் மாதம் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி தனது பிறந்தநாள் அன்று மனைவியை பிரிய விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்