ஆவேசமாக தயாராகும் நயன்தாரா… ஜவான் படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸ்

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (14:28 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதையடுத்து இப்போது படத்தின் பிஸ்னஸ் மற்றும் ப்ரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன. ஷாருக் கானின் கடைசி படமான பதான் திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த நிலையில் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் இப்போது படத்தின் நாயகியான நயன்தாரா இடம்பெற்றுள்ள புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கையில் துப்பாக்கியுடன் நயன்தாரா ஆவேசமாக இருப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்