அட்வெண்ட்ச்சர் மூடில் ஜான்வி கபூர்… மலையுச்சியில் நின்று எடுத்த புகைப்படம்!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (10:03 IST)
ஜான்வி கபூர் வரிசையாக வெளியிடும் புகைப்படங்கள் புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் அடுத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசுபொருளாக இருக்க விரும்பும் ஜான்வி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் முன்னணி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாலிவுட் ஹீரோயின்கள் நடிப்பை விட கவர்ச்சியான தோற்றத்துக்கு முன்னுரிமை அளிப்பார்கள். அந்த வழியையே ஜான்வி கபூரும் இப்போது பின்பற்ற ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் அவர் இன்று மலையுச்சியில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்