இயக்குனர்களை வைத்து ட்ரெண்டாகும் ஜெய் பீம் காலண்டர் காட்சி!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (20:22 IST)
நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம்.

பழங்குடி மக்களுக்கு எதிராக நடக்கும் காவல்துறை அடக்குமுறைகளை எடுத்துக்காட்டும் விதமாக உருவான இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்து அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட்டது.
25 ஆண்டுகளுக்கு முன்னர் கடலூர் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்த படம் அமேசான் ஓடிடியில் தற்போது வெளியாகி மிகப்பெரிய பாராட்டுகளையும் வரவேற்புகளையும் குவித்தது.
அதில் குறிப்பாக வன்னியர் சாதி குறித்து படத்தில் நடித்திருந்த போலீசாருக்கு காட்சி வைக்கப்பட்டிருந்தது.

அது குறிப்பிட்ட சாதியினரை கொச்சைப்படுத்துவதாக அரசியல் கட்சி தலைவர்கள் முதல் அந்த சாதியை சேர்ந்தவர்கள் வரை சூர்யாவிற்கு எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். 
ஆனால், அந்த படம் சொல்லியுள்ள கருத்தினை புரிந்துக்கொண்டவர்கள் சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற அந்த காலண்டர் காட்சியை தமிழ் சினிமா இயக்குனர்கள் எந்தெந்த கோணங்களில் படத்தை எடுத்திருப்பார்கள் என்பது குறித்த ட்ரோல் மீம்ஸ் இணையத்தில் வெளியாகி பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்