’அண்ணாத்த’ படத்தின் மெயின் வில்லனாகும் ‘பிகில்’ நடிகர்: ஆச்சரிய தகவல்

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (08:28 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு சுமார் 50% முடிந்துவிட்ட நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது அரசின் அனுமதி கிடைத்து அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் தொடங்கிவிட்ட நிலையில் அடுத்த மாதம் முதல் ’அண்ணாத்த’ படப்பிடிப்பும் தொடங்க இருப்பதாகவும் இதற்காக செட் அமைக்கும் பணியும் ஈசிஆர் சாலையில் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது 
 
முதல் கட்டமாக நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாகவும் அதனை அடுத்து ஜனவரி முதல் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது 
 
மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், கோபிசந்த் உள்ளிட்ட வில்லன்கள் இருந்தாலும் மெயின் வில்லனாக நடிப்பதும் ஜாக்கிஷராப் என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இவர் விஜய்யின் பிகில் திரைப்படத்தில் மெயின் வில்லனாக நடித்தவர் என்பதும், ’அண்ணாத்த’ படத்தின் மெயின் வில்லனும் இவர்தான் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ரஜினிகாந்த் ஜாக்கிஷராப் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு ஜனவரியில் நடைபெறும் என்றும் இதற்காக 20 நாட்கள் ஜாக்கிஷராப் கால்சீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்