ரஜினி கட்சி தலைமையில் மெகா கூட்டணியா? பரபரப்பு தகவல்

புதன், 16 செப்டம்பர் 2020 (07:40 IST)
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் கூட்டணி குறித்த ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன
 
திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் தற்போது இருக்கும் கட்சிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் தொடராது என்று கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கு அறிகுறியாக தற்போதே இரு கட்சிகளின் தலைவர்கள் அதிமுகவை விமர்சித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. அதேபோல் பாமகவும் அதிமுக கூட்டணியில் நீடிப்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை போதுமான சீட் கிடைக்காததால் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
இம்முறை திமுக 200 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதால் மீதமுள்ள 34 தொகுதிகளிலும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் விடுதலைசிறுத்தைகள் கட்சிகள் ஏற்றுக்கொள்ளாது என்றே தெரிகிறது 
 
இந்த நிலையில் ரஜினி தலைமையில் ஒரு புதிய கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ரஜினி தலைமையில் பாமக, விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்ட் கட்சிகள், தினகரனின் அமமுக ஆகிய கட்சிகள் இணையும் என்றும் முதல் முறையாக அதிமுக திமுகவுக்கு மாற்றாக ஒரு புதிய வலிமையான கூட்டணி அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவை எல்லாம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்