இதுதாண்டா போலீஸ் அபிராமியின் புதிய முகம்

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (11:30 IST)
இது, டாக்டர் ராஜசேகர் நடித்த இதுதாண்டா போலீஸ் அல்ல. விருமாண்டி அபிராமி நடிப்பில் மலையாளத்தில் வெளியான இதுதாண்டா போலீஸ். ஆமாம், மலையாளத்தில் அப்படியொரு படம் வெளியானது.


 
 
விஸ்வரூபம் படத்தில் பூஜா குமாருக்கு டப்பிங் பேச அமெரிக்காவில் இருந்த அபிராமியை தேடி கண்டுபிடித்தார் கமல். அதன்பிறகு தொடர்ச்சியாக தமிழ், மலையாளத்தில் நடிக்கிறார் அபிராமி. அதிகமும் மலையாளத்தில். 36 வயதினிலே படத்தில் சின்ன வேடத்தில் நடித்தவர், மலையாளத்தில் வெளியான இதுதாண்டா போலீசில் போலீசாக நடித்தார். தற்போது, ஒரே முகம் என்ற படத்தில் விரிவுரையாளராக நடிக்க உள்ளார்.
 
சஜித் இயக்கும் புதிய படத்தில் எண்பதுகளில் வரும் கல்லூரி விரிவுரையாளர் வேடம் அபிராமிக்கு. அவருக்கு அந்த வேடம் பரிபூரணமாக பொருந்தும் என்பதால் அவரை தேர்வு செய்துள்ளார் சஜித்.
 
தமிழுக்கு எப்போ வர்றீங்க?

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்