வாடிவாசல் திரைப்படத்தை தொடங்க சூர்யா ஆர்வமாக இல்லையா?

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (12:45 IST)
வாடிவாசல் படத்தை தொடங்குவதில் சூர்யா முன்பு காட்டிய ஆர்வத்தை இப்போது காட்டவில்லை என்று தகவல்கள் பரவி வருகின்றன.

சூர்யாவின் சூரரைப் போற்று  திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கான பணிகள் இப்போது தாமதம் ஆகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இப்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்து சுதா கொங்கரா மற்றும் ஞானவேல் ஆகியோர் இயக்கத்தில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னரே அவர் ஒப்புக்கொண்ட வாடிவாசல் என்ன ஆனது எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் வாடிவாசல் படத்தை தொடங்குவதற்கு முன்பு காட்டிய ஆர்வத்தை சூர்யா இப்போது காட்டவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்