’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஒத்திவைப்பா?

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (16:33 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 15ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் 
 
’அண்ணாத்த’ படபிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்து விட்டார் என்றும், இதனால் இந்த படப்பிடிப்பு நடைபெறுவது என்று செய்தி வெளியானது. மேலும் படப்பிடிப்பிற்கு தேவையான ஆரம்பகட்ட பணிகள் மற்றும் செட் அமைக்கும் பணிகளும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி சிட்டியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் எதிர்பாராத வகையில் சிறுத்தை சிவாவின் தந்தையார் சமீபத்தில் காலமானார் இதனால் அந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தள்ளிப் போக உள்ளதாகும் தந்தையின் 16வது நாள் சடங்குகள் உள்பட அனைத்து சடங்குக்களும் முடிந்த பின்னர் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என சிறுத்தை சிவா தற்போது திட்டத்தை மாற்றி உள்ளதாகவும் கூறப்பட்டது
 
ஆனால் சன்பிக்சர்ஸ் தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி ’அண்ணாத்த’ படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கும் என்றும், படப்பிடிப்பு தொடங்குவதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்