காதல் வலையில் சிக்கிய ஆதி - நிக்கி கல்ராணி? கோலிவுட் நியூ Love Couple!

Webdunia
சனி, 18 ஜூலை 2020 (10:12 IST)
நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி காதல் வயப்பட்டுள்ளதாக கோலிவுட் கிசுகிசுக்க துவங்கியுள்ளது. 
 
தமிழில் மிருகம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆதி. இவர் யாகாவராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களிலும் சில தெலுன்ஃப்கு படங்களில் குணச்சித்ரா வேடத்திலும் வில்லன் பாத்திரத்திலும் நடித்துள்ளார். 
 
இவர் தற்போது ‘க்ளாப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்து வருகிறார். இதற்கு முன் இருவரும் யாகாவராயினும் நாகாக்க, மரகத நாணயம் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். 
இந்நிலையில் ஆதியின் தந்தையும் பிரபல தெலுங்கு பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ரவிராஜாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் நிக்கி கல்ராணி கலந்துக்கொண்டுள்ளார். தனது குடும்பத்தினரோ நிக்கி கல்ரானி இருக்கும் புகைப்படத்தை ஆதியே தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
இதனால் இருவரும் காதல் வயப்பட்டுள்ளதாக கோலிவுட் கிசுகிசுக்க துவங்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்